Thursday, October 20, 2011

14.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?




14.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?

    
                     முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் இயற்க்கையான புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருட்களான
 indoles, isothiocyanates, glucosinolates, dithiolethiones, and phenols (1)அதிக அளவில் அடங்கியுள்ளது.  




                  





குறிப்பாகவே, இதிலுள்ள sulforaphane வளர்சிதைமாற்றத்தினுடைய இரண்டாம் கட்ட என்சைம்கள்- phase-2 enzymes அளவில் அதிகம் உற்பத்தி செய்கிறது.





                                                                                                                      

இவை  புற்று நோய் உண்டாக்கும் பொருட்களை தடை செய்து (preventing the formation of carcinogens in your body or by blocking cancer-causing substances from reaching or reacting with sensitive body tissues)(2) உடம்பினை புற்று நோயிலிருந்து காக்கிறது.


                       எனவேதான,  முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.

2.http://www.asianonlinerecipes.com/vegetables-guide/cabbage-medicinal-benefits.php

13.விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி விக்கலுக்கு சிறந்தது.எங்ஙனம்?








13.விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி விக்கலுக்கு சிறந்தது.எங்ஙனம்?
          
             விக்கல் வாந்தி நோய்களுக்கு மயிலிறகு சுட்ட கரி சூரணமாக சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.



           இது எங்ஙனம் உடலில் செயல்படுகிறது என்பதை தெளிவாக அறிவோம்.







                                                   

வாந்தி,விக்கல் ஏற்படுவதற்கு காரணமான கட்டுப்பாட்டு மையங்கள்(Regulating centres)(1) மூளையில் உள்ளன.
  
          மூளை திசுக்களில் Po2எனப்படுகிற ஆக்சிசன் அளவு குறைந்து Pco2
எனப்படுகிற கரியமில வாயு அளவு அதிகமாகும்போது,
 வாந்தி,விக்கல் ஏற்படுவதாக நவீன உடலியங்கியல் modern physiology கூறுகின்றது.


                                                                           hi-cough
           இவ்வாறு உயிர் வளி Po2 அளவு குறையும்போது மூளை கட்டுப்பாட்டு மையங்கள் தூண்டப்பட்டு, வாந்தி,விக்கல் உண்டு பண்ணுகிறது.

   
1.text book of modern physiology-guyton

Wednesday, October 19, 2011

12.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?





12.தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும் ஏன்?

 
                                       தானிய வகைகளை அறுவடை செய்யும்போதும்,சேமித்து வைக்கும்போதும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.



       இவை மூலம் அத்தானிய வகைகளில் Aflatoxins என்கிற நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன,13 வகையான இவைகளில் பி1 வகை மிகவும் நச்சுத்தன்மை உடையது.


       இவை Aspergillus பூஞ்சையாலே உண்டாகின்றன.
 



       இவை DNA and RNA உருவாக்கத்திற்கு தேவையான protein உருவாவதை தடுக்கின்ற்ன.




    
மேலும் புற்று நோயையும் உண்டாக்குவதாக அறியப்பட்டுள்ளது.

       மேலும் ஈரல் நச்சாக செயல்படுகிறது. ஈரல் சிதைவு,காமாலை,வலி,வாந்தி,காய்ச்சல்,கைகால் வீக்கம் போன்றவை அறிகுறிகள் ஆகும்.




      எனவேதான் தானிய வகைகளை ஈரப்பதம் படாமல் மூடியே வைக்க வேண்டும்.


11.அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் செய்வது ஏன்?


11.அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் செய்வது ஏன்?

            சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட இரும்புசத்துமிக்க அன்னபேதியை சுத்தி செய்யும்போதும் மருந்தாக முடிக்கும் போதும் எலுமிச்சைபழச்சாறை பயன்படுத்தி செய்யப்படுகிறது.அதற்கான நவீன அறிவியல் விளக்கத்தினை காண்போம்.



              “The role of vitamin C in iron absorption” இக்கட்டுரையில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது குறித்து Hallberg L, Brune M, Rossander L. குறித்து தெளிவாக விளக்குகின்றனர்.
ஆதாரம்: PMID: 2507689 [PubMed - indexed for MEDLINE].






              இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவது இரு காரணங்களை பொருத்தது.

              1.வலுவூட்டும் காரணிகள் - ascorbic acid, meat/fish
              2.தடை செய்யும் காரணிகள் - phytates, tannins






          
             இவற்றில் இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுவதில் ascorbic acid பணி உறுதிசெய்யப்பட்டுள்ளது, ascorbic acid இரண்டு வழிகளில் பணியாற்றுகிறது.

1.      insoluble and unabsorbable iron compounds உருவாகுவதை இது தடைசெய்கிறது.
2.      உடலில் விரைவில் அகத்துறிஞ்சப்படுவதான நிலையான
       ferrous iron நிலை உருவாக்கின்றது.

     எலுமிச்சை பழச்சாற்றில் ascorbic acid அதிகளவில் உள்ளதால்,விரைவில் அன்னபேதியிலுள்ள இரும்புச்சத்து அகத்துறிஞ்சப்படுகிறது.

எனவேதான், அன்னபேதியை மருந்தாக முடிக்கும்போது எலுமிச்சை பழச்சாற்றில் பயன்படுத்தப்படுகிறது.

Saturday, October 8, 2011

10.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?



10.கேசரி பருப்பினை அதிகம் நாட்கள் உணவாக சாப்பிடக்கூடாது.ஏன்?
 
                கேசரி பருப்பில் ODAP என்ற oxalyl-L-α,β-diaminopropionic acid அதிக அளவு உள்ளது.

               இதற்கு β-N-oxalyl-amino-L-alanine, BOAA என்ற மற்றொரு பெயரும் உண்டு.
             
              இது glutamate analogue neurotoxin ஆகும். கேசரி பருப்பினை அதிகம்  நாட்கள் உணவாக சாப்பிடும்போது,பக்க வாதத்தினை(paralysis) உண்டாக்கும்.


             உடலுடைய கீழ்பகுதி இயக்கம்(inability to move the lower limbs) மற்றும் செயல்கள்(lack of strength) முடங்கி போகின்றதே.

         
           கேசரி பருப்பினால் உண்டாகும் நச்சு நிலை லத்ரைசம்(lathyrism எனப்படுகிறது!இதன் முக்கிய குறிகுணம் குண்டிப்பகுதி தசை(gluteal muscles (buttocks) சுருக்கம் ஆகும்.

        
   மேலும் ODAP மைட்ட்டோகாண்டிரியாவில் நச்சாக செயல்பட்டு,இயக்க நரம்பு செயலிழப்புகளை (excess cell death in motor neurons) உண்டாக்கும்.





9.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்?




9.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்? 


          அகத்திகீரையினுள் சப்போனின்(saponin)(1 அதிக அ ளவில் உள்ளது  இதற்கு இரத்த சிவப்பு அணுக்களை சிதைவடைய செய்யும்(haemolysis) ஆற்றல் உள்ளது.




                                                                saponin

                மேலும் அகத்திகீரையில் அடங்கியிருக்கும் (protein complexes புரத கூட்டுப்பொருட்கள் செரிமானம் அடையும்போது,மருந்தின் செயல்திறனை குறைக்கும் தன்மை உடையவை.
       

        எனவேதான்,
மருந்தருந்தும்போது அகதிக்கீரையை தவிர்க்கும்படி வலியுறுத்தபடுகிறது.

1.http://www.jimmunol.org/content/3/5/423.abstract
2. யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
    மரு.சிவசண்முகராஜா.

8.மாலை வெயில் காய்தல் நல்லது(1). எங்ஙனம்?




8.மாலை வெயில் காய்தல் நல்லது(1). எங்ஙனம்?


 

         


 

             மாலை வெயில் காய்தல் பயன்கள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே தேரன் சித்தர் ” வெயில் காய்ந்தார்க்கு எல்லா நோய்க்கூட்டங்களும் நீங்கும் என தனது வெண்பா என்னும் நூலில் கூறியுள்ளார்.

             இன்றோ,ஆராய்ச்சியாளர்கள் மாலை வெயில் காய்தல் மூலம் உடலின் நீரிழிவைகுணப்படுத்தும் என்றும்,உடலிலுள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி அளவினை அதிகப்படுகிறதாகவும் ஆராய்ச்சி(2) மூலம் நீருபிக்கின்றனர்.
 
             
   
                
வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு : இந்திய மருத்துவர்கள் தகவல் (2)

           
            புதுடில்லி : "சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது' என, இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும் "இன்சுலின்' ஹார்மோன், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. "இன்சுலின்' சுரக்க, "கால்சியம் மற்றும் விட்டமின் டி' அவசியம். இவற்றின் அளவு குறையும் போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்ந்து, "நீரிழிவு நோய்' ஏற்படுகிறது.


7.வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?





7.வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது.(1) ஏன்?


     பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் மின்சார சக்த்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது,அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது.இவ்வாறே,பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது.




ஆதலால்,பூமி  பெருங்காந்தமாகின்றதே.இதனை நீருபிக்க ஒரு காந்த்த ஊசியை எப்படி தொங்கவிட்டாலும்.அது வடக்கு-தெற்காகவே நிற்கக் காணலாம்.இதனையே,இயற்பியல் நூல்கள் மின்காந்த புலம்,காந்த திச்சைகளின் ஈர்ப்பு ம்ற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.காந்த ஊசியானது வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம்,காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும்.தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதலே காரணம்.





   இதைபோலவே மனித சரீரத்திலும் காந்த சக்தி உள்ளது.உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்த்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும்.

நாம் ஊன்றி பார்த்தோமேயானால்,பொதுவாக சரீரத்தின் வட துருவம் – தலை.தூங்கும் போது தெற்கே தலை வைத்து கொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, சரீரத்தின் காந்த சக்தி கெடாமல் இருக்கும்.இதற்கு மாறாக.வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி,தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது.உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும்.


   
                                    எனவேதான்,வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது.
1.இயற்கை தரும் இன் மருந்துகள்.  .டி.எஸ்.ஜனக குமாரி

6.கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்வது சிறப்பு.(1)ஏன்?




6.கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்வது சிறப்பு.(1)ஏன்?


                                  மின்சார சக்தியானது உடலில் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு செல்லும்போது அது எங்கு உட்செல்கிறதோ,அஙுள்ள அழற்சியை போக்கி,எங்கு வெளிச்செல்கிறதோ அங்கு அழற்சியை உண்டு உண்டுபண்ணும் என்பது மின்சார நூல் கூறும் உண்மை.பூமியில் மின்சார விசையானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்கிறது.




               கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்யும்போது,மின்சார விசயானது நமது உடலில் சிரசிலிருந்து பாதத்தை நோக்கி செல்லும்.ஆகவே,சிரசில் உள்ள அழற்சியை நீக்கி பாதத்தில் கொடுக்கும்.எனவே,தலையிலுள்ள மூளை போன்ற உறுப்புகள் பலனடையும்.

                  எனவே தான்,கிழக்கு திசையில் தலை வைத்து நித்திரை செய்ய வேண்டும்.
 
1.இயற்கை தரும் இன் மருந்துகள்.  .டி.எஸ்.ஜனக குமாரி

5. உளுந்தம் பருப்பு வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.ஏன்?



5. உளுந்தம் பருப்பு வகையை வேக வைத்து பட்சணமாக(
சுண்டல்,பட்டாணி சிற்றுண்டியாக உண்பது போல)
 உண்ண முடியாது(1).ஏன்?               

          
 
உளுந்து ,சோயாபீன் போன்ற பருப்பு வகைகளில் trypsin -inhibitors (2) உள்ளது. 

               
   
          இது சிறுகுடலில் உள்ள trypsin செயல்பாட்டினை மந்தப்படுத்தும் தன்மை உடையது.

        இதன் விளைவாக,குடல் பகுதிகளில் புரத செரிமானம் சரிவர நடை பெறாது.
      
          

எனவேதான், உளுந்தம் பருப்பு சோயாபீன வகையை வேக வைத்து பட்சணமாக உண்ண முடியாது.
 
1.  யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
    மரு.சிவசண்முகராஜா.
2.http://www.diettofu.com/faqmain.htm 
 

4. கல்லடைப்பு நோய் உள்ளவர்கள் ( CALCIUM TYPE OF CALICULI ) முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை, சாப்பிடக்கூடாது.ஏன்?








4. கல்லடைப்பு நோய் உள்ளவர்கள் ( CALCIUM TYPE OF CALICULI  ) முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை, சாப்பிடக்கூடாது.ஏன்?
               .

            

               முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயில் அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது.
 ஒரு பிடி முருங்கைக்கீரை அல்லது  ஒரு முருங்கைக்காயில் (100 gm) 440மி.கி கால்சியம் (2) உள்ளது.

 
Just 25 grams of moringa leaf powder contains, Calcium 125%(3)



 
        







எனவே,ஏற்கனவே கால்சியம் சத்து அதிகமுள்ளதால் கல்லடைப்பு நோயால் தாக்கப்பட்டவர்கள், முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை உண்ணும்போது அவர்களின் நோய்  நிலை மேலும் அதிகரித்து,உடல் நிலையை மேலும் மோசமடைய காரணமாகும். 





       

 எனவேதான், கல்லடைப்பு நோய் உள்ளவர்கள் ( CALCIUM TYPE OF CALICULI  ) முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காயினை நீக்கி உணவு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

   
1.  யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
    மரு.சிவசண்முகராஜா.