Wednesday, November 23, 2011

50.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?

50.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?
      


          பீன்ஸ் SAPONIN என்கிற முக்கிய வேதிப்பொருள்   அடங்கியுள்ளது.


     இது cholesterol இணைந்து குடலில் உறிஞ்சப்படாமலே,மலத்தின் வழியே வெளியேற்றி விடுகிறது.





     இதன் மூலம் அதிகளவு cholesterol சேராமல், உடம்பினை கெட்ட  கொழுப்புச்சத்து கேடுகள் வராது தடுக்கிறது.



49..சிட்ரசு வகை பழங்கள் புற்றுனோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?

49..சிட்ரசு வகை பழங்கள் புற்றுனோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?


                            சிட்ரசு வகை பழங்களான எலுமிச்சை,ஆரஞ்சு, நாரத்தை போன்ற  பழங்கள் லிமொனின்  limonine  என்கிற முக்கிய வேதிப்பொருள்  உள்ளது.
                          




                       இது  anti oxidant க செயல்படுகிறது.,
         


                           இது free radicles எதிராக போராடி புற்று நோய் செல்கள் உருவாகும் தன்மையை தடுக்கிறது.
  
   எனவேதான், சிட்ரசு வகை பழங்கள் புற்று  நோய்க்கு சிறந்தது.

48.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம் சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?

 48.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம் சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?


கால்சியம், மக்னீசிய சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், பெண் குழந்தை பிறக்கும் என நவீன ஆராய்ச்சிகள் நீருபிக்கின்றது. ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்..

கருவில் ஆண்-பெண் உருவாகும் வகை:




கருவிலிருக்கும் குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை தீர்மாணிப்பது XX-XY குரோமோசோம்கள் மட்டுமல்ல.தாயின் கருப்பையில் கரு உருவாகும்போது, கரு மொட்டில்(fetus),உல்போனியன் குழாய்(Wolffian ducts) மற்றும் முல்லேரியன் குழாய்(Müllerian ducts) என்ற இரு வகையான குழாய்கள் (premitative ducts) உருவாகின்றன.


இதில், உல்போனியன் குழாய்(Wolffian ducts), testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றின் செய்கையினால்,ஆணுக்குரிய பிறப்பு உறுப்புகள் உருவாகின்றது.

இந்த Hormone களின் செய்கைகள் அதிக அளவு இல்லாத போத அல்லது oestrogen அளவு அதிகமான வேளை, முல்லேரியன் குழாய்(Müllerian ducts),பெண் பிறப்பு உறுப்புகளை உருவாக்குகின்றது.

எனவே,கருவுற்றிருக்கும் போது, தாயானவளோ, testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றினை மட்டுப்படுத்தும் அல்லது oestrogen அளவு அதிகமான உணவு வகைகளை உண்ணும் போது பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.





பீன்சு,பாலடைக்கட்டி அதிகளவில் உள்ள கால்சியம், மக்னீசிய சத்துக்கள் போன்ற வெதிப்பொருட்கள் testosterone மற்றும் Anti- Müllerian Hormone அதிகமான அளவு தூண்டுவிடுவதை தடுக்கின்றன.

இதனாலே பெண் குழந்தை வேண்டுகிறவர்கள் பீன்சு,பாலடைக்கட்டி சாப்பிட வலியுறுத்தபடுக்கின்றனர்.

47.வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?


 47.வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?




சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால், ஆண் குழந்தை பிறக்கும் என நவீன ஆராய்ச்சிகள் நீருபிக்கின்றது. ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்..


கருவில் ஆண்-பெண் உருவாகும் வகை:




கருவிலிருக்கும் குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை தீர்மாணிப்பது XX-XY குரோமோசோம்கள் மட்டுமல்ல.தாயின் கருப்பையில் கரு உருவாகும்போது, கரு மொட்டில்(fetus),உல்போனியன் குழாய்(Wolffian ducts) மற்றும் முல்லேரியன் குழாய்(Müllerian ducts) என்ற இரு வகையான குழாய்கள் (premitative ducts) உருவாகின்றன.

இதில், உல்போனியன் குழாய்(Wolffian ducts), testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றின் செய்கையினால்,ஆணுக்குரிய பிறப்பு உறுப்புகள் உருவாகின்றது.



இந்த Hormone களின் செய்கைகள் அதிக அளவு இல்லாத போத அல்லது oestrogen அளவு அதிகமான வேளை, முல்லேரியன் குழாய்(Müllerian ducts),பெண் பிறப்பு உறுப்புகளை உருவாக்குகின்றது.

எனவே,கருவுற்றிருக்கும் போது, தாயானவளோ, testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றினை அதிகம் கொண்ட,உணவு வகைகளை உண்ணும் போது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.

வாழை பழத்தில் அதிகளவில் உள்ள சோடியம், பொட்டாஷியம் போன்ற வெதிப்பொருட்கள் testosterone மற்றும் Anti- Müllerian Hormone அதிகமான அளவு தூண்டுவிடுகின்றன.


ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனாலே,ஆண் குழந்தை வேண்டுகிறவர்கள் வாழைப்பழம் சாப்பிட வலியுறுத்தபடுக்கின்றனர்.

46.சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும். எங்ஙனம்?

46.சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும். எங்ஙனம்?




        சிவப்பு வெங்காயத்தில் ஆந்த்ரோசயனின் anthocyanins அதிகளவில் உள்ளது.

இது இரத்தக்குழாய்கள் இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.


 





மேலும். இரத்தக்குழாய்களில் இரத்த தட்டுகள் இணைந்து தடை செய்வதையும் தடுத்து,இரத்த தடை இல்லாம்ல் இருக்க உதவுகிறது.



சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும

45.உணவின்போது, கருவேப்பிலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?


  
45.உணவின்போது, கருவேப்பிலை  நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?

        கருவேப்பிலை பொதுவாக உணவு பதார்த்தங்கள் செய்யும்போது,சுவை அதிகரிக்க தாளிப்பு பொருளாக சேர்க்கப்படுவது தமிழ் நாட்டு வழக்கம்.


       அங்ஙனம் சேர்க்கப்படும் கருவேப்பிலை சாப்பிட படாமல் ஒதுக்கிவைக்கப்படுவது இயல்பாக நடைபெறும் செயல்.

           கருவேப்பிலை வெறும் உணவின் சுவை கூட்டு வதற்கு மட்டும் சேர்க்கப்படவில்லை.

            கருவேப்பில்லையில் இருக்கும் மருத்துவ குணத்திற்காகவே சேர்க்கபட்டுள்லாஊ என்கிறதை நவீனஆராய்ச்சிகள் நீரூபிக்கின்றது.

            கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.இதனால் இரத்த குறைவு நோய்க்கு சிறந்த பலனளிக்கும்.

             மேலும் கருவேப்பிலை உடலில் சூட்டை குறைத்து,முடி கொட்டுவதையும் தடுக்கிறதாம்.
மேலும் கருவேப்பிலை நீரிழிவு நோயில் நன்றாக செயல்படுவதை நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

44.மாலைக்கண் நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?


 
44.மாலைக்கண்  நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?

தாய்ப்பாலில்  அதிகமான அளவு உயிர்ச்சத்து விட்டமின் உள்ளது.

                 சீம்பாலிலும் விட்டமின் வின் முன்னோடியான கரோட்டின்(CAROTENE   )அதிகம் உள்ளதாக தெரிகிறது.


மேலும் கரோட்டின்(CAROTENE  ) அதிகம் உள்ளதாலேயே சீம்பால் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது.





எனவே,தாய்ப்பால் உண்டு வருவதால் பார்வை மிகவும் தெளிவுப்படும்.அதிலும் குறிப்பாக மாலைக்கண் நொயுடையவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.

43.துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம் ?


43.துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது. எங்ஙனம் ?


              சித்த மருத்துவத்தில் விந்துகுறைபாடு நோய்க்கு துத்த நாகம் சேர்ந்த மருந்துகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.

இதனை என்கிற பதார்த்த குண சிந்தாமணி பாடல் விளக்குகின்றது.


நவீன உடலியங்கியல் தத்துவப்படி,விந்தணுவில் துத்த நாகம் zinc level is about 135±40 micrograms/ml இருப்பதாக கூறப்படுகிறது.

மரபணு சம்பந்தமான செய்திகளை
விந்தணுவில் சேர்ப்பதில் துத்த நாகம் முக்கிய செயல் உடையது. மேலும் விந்தணு உருவாக்கத்திலும் spermatogenesis முகிய பங்கு வகிக்கிறது.

எனவேதான், துத்த நாகம் சேர்ந்த மருந்துகள்,விந்து குறைபாடு நோய்க்கு சிறந்தது.


Tuesday, November 22, 2011

42.திராட்சை பழம் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. எங்ஙனம்?

42.திராட்சை பழம் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. எங்ஙனம்?



திராட்சை பழத்தில் Resveratrol என்கிற முக்கிய வேதிப்பொருள் உள்ளது.



இது free radicles உருவாவதை தடுத்து, anti-oxidant செயல்படுகிறது.

 


இதன் மூலம் புற்றுனோய்க்கு எதிராக பணியாற்றுவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, heart disease, degenerative nerve disease, viral infections and mechanisms of Alzheimer's disease போன்றவை வராமல் தடுக்கவும் உதவுகிறது.

41.ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.எங்ஙனம்?

41.ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.எங்ஙனம்? 

ஆப்பிளின் தோலில் கொயர்சிடின் Quercetin என்கிற முக்கிய நிறமிப்பொருள் உள்ளது.



இது Flavonoids வகையில் ஒன்று.





இது anti oxidant க செயல்படுகிறது.





மேலும், இது இயற்கையான anti-histamine செய்கையை கொண்டுள்ளது.

இது allergic and inflammatory mediators மூலமாகவே histamine உருவாவது,வெளியிடுவதை தடுக்கிகிறது.

Histamine உண்டாவதை தடுப்பதன் மூலமாக ஆஸ்மா நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.




எனவேதான், ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.

Wednesday, November 16, 2011

40.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?

40.புரதகோள வீக்க நோயுள்ளவர்கள் சோயாபீன் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?
                          ஜப்பானியர்களுக்கு prostate cancer ஏற்படும் வாய்ப்பு குறைவு. காரணம்
என்னவெனில்,உணவில் அதிகளவில் சோயா பீன் சாப்பிடுவதே ஆகும்.       



                சோயாபீன் இசொபிளெவின் isoflavones இதுக்கு காரணம்.
சோயாபீன் இசொபிளெவின் பிரித்து எடுக்கப்படும் Equol என்கிற வேதிப்பொருளே புரதகோள வீக்க நோய் தோன்றுவதை தடுக்கிறது.


             
                    மனிதர்களுக்கு தலை வழுக்கை baldness மற்றும் புரதகோள வீக்க நோய் prostate cancer தோன்றுவதற்க்கு காரணம் dihydrotestosterone என்கிற hormone. ஆண் இனப்பெருக்க hormoneகளில் ஒன்றான dihydrotestosterone அளவினை பாதிக்காமல்,அதன் செயல்களை மட்டும் Equol கட்டுப்படுத்துவதால் புரதகோள வீக்க நோய் prostate cancer  தோன்றுவதை தடுக்கிறது.




 
39.தண்ணீரை தெளிய வைக்க தேற்றான் கொட்டை உபயோகமாகிறது.எங்ஙனம்?

                                 

                                தண்ணீரை சுத்தம் செய்வதற்காக தமிழ் மக்களால்,பழங்கால தொட்டு,தேற்றான் பயன்படுத்தபட்டு வருகிறது.தேற்றான் கொட்டையால் நீர் தெளிவது போல்,தோழியின் சொல்லால் தன் மனம் தெளிந்ததாக அக நானூறு தலைவி கூற்றே இதற்கான சிறந்த உதராணம்.

              உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சி அறிக்கையில், தண்ணீரை தெளிய வைக்க தேற்றான் கொட்டை,இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காலங்காலமாக பயன் படுத்தப்பட்டு வருவதாகும்,அதிலுள்ள 1:7 என்ற கலவையே தண்ணீரை தெளிய வைக்க காரணமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.(Tripathi et al., 1976; Able et al, 1984)

The chemical composition of the coagulant in Strychnos potatorum has been identified as a polysaccharide consisting of a 1:7 mixture of galactomannan and galactan.

1.http://www.who.int/water_sanitation_health/dwq/wsh0207/en/index6.html
2.http://www.ehow.com/how_10043151_treat-water-strychnos-potatorum.html

38.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?



38.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?
       தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரையோ பார்க்காவசியம் இல்லை”.இது பழமொழி.

     
.

         ”ஆப்பிள் விதைகளை மென்று தின்னும்போது உயிர் போகும் அபாயம் உள்ளது”.இது புது மொழி.



    


              ஆப்பிள் விதையில் அமைக்ளாடின் Amygdalin என்ற நச்சுப் பொருள் உள்ளது.இது மனித குடலில் என்சைம்களுடன் வினைபுரிந்து hydrogen cyanide வாயுவை உண்டக்குகிறது.இந்த வாயுதான் இரண்டாம் உலகப்போரின் போது உயிர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது. இது Cylon B என அழைக்கப்படுகிறது.




             இந்த வாயு சிறுகுடலில் உள்ள இரத்த அணுக்களை  பாதித்து, ஆக்சிசன் எடுத்து செல்லும் திறனை குறைக்கிறது.இதனை தொடர்ந்து இரத்த அணுக்கள் அழிந்து,மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.



           ஆப்பிள் juice தயாரிக்கும்போதுவிதைகளுடன் ஆப்பிள் பயன்படுத்தும்போதும்,ஆப்பிள் விதைகள் சிறுவர்கள் கைகளில் அகப்படமால் அகற்றுவதிலும்,மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.


37.மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருப்பது ஏன்?


  
37.மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருப்பது ஏன்?



               மூளைக்குள் நச்சுக்கிருமிகள்,பிற தேவையில்லாதவாகிய பொருட்கள் நுழைவதை தடுக்க இயற்கையாக மனிதனுக்கு உள்ள பாதுகாப்பு உறையே blood-brain barrier (BBB).

            இதன் பயன்பாடு குறித்து Paul Ehrlich ஆராய்ச்சி செய்தார்.இதன் முழு பயனை அவரது மாணவர் Goldman கண்டறிந்தார்.



  
               இதன் சிறப்பம்சம் என்னவெனின்,
இது, இதன் வழியே கொழுப்பில் கரையக்கூடியவனவாகிய பொருட்களை மட்டுமே அனுமதிக்கும்.
                 (the main constituent of cell membranes are lipids, it would seem that a molecule could only can get into the brain if it were lipid-soluble.),








           சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் வல்லாரை நெய்,பிரம்மி நெய் முதலிய மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவில் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கமுடியும்.

           எனவேதான், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் நெய் வடிவத்தில் இருக்கின்றதே.


36.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?


   
36.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,தைராய்டு நோயுள்ளவர்கள் அதிகம் உண்ணக்கூடாது.ஏன்?  
              முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் goitrin, thiocyanate, and isothiocyanate போன்ற வேதிபொருட்கள் இருக்கின்றன. 
                                                                                           இவை தைராய்டு சுரபியின் செயலை நிறுத்துவதுமட்டுமின்றி,அச்சுரப்பியை வீங்க காரணமகி,காய்டர்(goiter) உண்டாக்க கூடியவை.

                 எனவே இவைகளை அதிக அளவில் தைராய்டு நோயுள்ளவர்களும் சாப்பிடக் கூடாது.


Tuesday, November 15, 2011

35. பகற்தூக்கம் கூடாது.ஏன்?


35. பகற்தூக்கம் கூடாது.ஏன்?        


        பகலில் தூக்கம் 18 வகையான வாதரோகங்கள் தோன்றும் என சீவரட்சாமிர்தம் பிற சித்த மருத்துவ நூல்களும் வலியுறுத்துகின்றன.      
                         
    மனித உடலில் உயிரியல் கடிகாரம் இயங்கிவருவதாகவும்,அதற்கு பெயர் circadian rhythmஎனவும் நவீன மருத்துவ அறிவியலால் கண்டரியப்பட்டதொரு உண்மை. இந்த சுழல்வு மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளை கட்டுப்படுத்தி சம நிலையை காக்கிறது.
             


பகலில் தூக்கம் செய்யும்போது circadian rhythm பாதிக்கப்பட்டு,மனித உடலில் தூக்கம்- விழிப்பு,வெப்பம்- குளிர்ச்சி சம நிலை, ஹார்மோன்கள் சுரப்பு இவைகளில் மாறுதல் ஏற்படுகிறது.






                 இதனால்,உணவு விருப்பமின்மை,மன அமைதியின்மை,வேலையில் நாட்டமின்மை உண்டாகின்றது.

  எனவேதான், பகற்தூக்கம் கூடாது.