38.சிலவேளைகளில் ஆப்பிள் விதை கூட நச்சு ஏற்படுத்துகிறது. எங்ஙனம்?
” தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரையோ பார்க்காவசியம் இல்லை”.இது பழமொழி.
.
”ஆப்பிள் விதைகளை மென்று தின்னும்போது உயிர் போகும் அபாயம் உள்ளது”.இது புது மொழி.
ஆப்பிள் விதையில் அமைக்ளாடின் Amygdalin என்ற நச்சுப் பொருள் உள்ளது.இது மனித குடலில் என்சைம்களுடன் வினைபுரிந்து hydrogen cyanide வாயுவை உண்டக்குகிறது.இந்த வாயுதான் இரண்டாம் உலகப்போரின் போது உயிர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டது. இது Cylon B என அழைக்கப்படுகிறது.
இந்த வாயு சிறுகுடலில் உள்ள இரத்த அணுக்களை பாதித்து, ஆக்சிசன் எடுத்து செல்லும் திறனை குறைக்கிறது.இதனை தொடர்ந்து இரத்த அணுக்கள் அழிந்து,மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
ஆப்பிள் juice தயாரிக்கும்போதுவிதைகளுடன் ஆப்பிள் பயன்படுத்தும்போதும்,ஆப்பிள் விதைகள் சிறுவர்கள் கைகளில் அகப்படமால் அகற்றுவதிலும்,மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.




No comments:
Post a Comment